தூத்துக்குடி தாளமுத்து நகர், கோவில்பிள்ளைவிளையைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார் மகன் முருகன் (30), கூலித் தொழிலாளி. தாயாரை இழந்த முருகன், தனது தந்தையாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தனக்கு 30 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையிலும் ஏக்திலும் முருகன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.