தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான ஜோசப் விஜயின் உத்தரவின் பேரில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது.
பதவியேற்றதைத் தொடர்ந்து கயத்தாறு பகுதிக்காக வருகை தந்த அவருக்கு, த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து பொன்னாடை போர்த்தி, பட்டாசுகள் வெடித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் த.வெ.க. நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், வசந்தம் உச்சிபாளையம், சாலைப்புதூர் கருப்பசாமி, மணிகண்டன், பொன்ராஜ், சிவகுமார், ராஜா, சண்முகபாண்டி, மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

