தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை பெற்று கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தகவலை அரசோ கவர்னர் மாளிகையோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தீபாவளிப் பண்டிகை காலத்தில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக வெளியானத் தகவலால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்துத் தெளிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பெற்று, அதனை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளதாக வெளியாகும் இந்தத் தகவலைத் தமிழக அரசோ அல்லது ஆளுநர் மாளிகையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

