எஸ்.ஐ.ஆர். திட்டத்தின்படி நாட்டில் மிகப்பெரிய தேசத் துரோகத்தைச் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒ
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமை தாங்கினா. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். டேனியல் ராஜ், சுடலைமுத்து மற்றும் சுடலையாண்டி உட்பட பலர் கலந்து கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

