தாராபுரம் இடைத்தேர்தலில் 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்; மதுராந்தகத்தில் 18,912 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ம் தேதி நடந்த தேர்தலில் 85.9 சதவீதம் ஓட்டு பதிவாகின. ஓட்டு எண்ணும் பணி ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் இன்று (அக்டோபர் 09) நடந்து வருகிறது.
மொத்த சுற்று எண்ணிக்கை-21
வேட்பாளர்கள்- 20வது சுற்று முன்னிலை நிலவரம்
1. தவெக (மரகதம் குமரவேல்)- 69,561
2. திமுக (பரந்தாமன்)-50,649
3. அதிமுக (கணிதா சம்பத்)- 45,740
4. நாதக (ஜானகி ராமன்)-1,753
5.மார்க்., கம்யூ., ( சுகந்தி)- 1,389
மதுராந்தகத்தில் 20ம் சுற்று முடிவில் 18,912 ஓட்டு வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் 80 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி திருப்பூர் எல்.ஆர்.ஜி.கல்லூரி வளாகத்தில் நடந்தது.
1.தவெக (சத்தியபாமா)- 66,841
2. திமுக (சுகன்யா)- 57,370
3. அதிமுக (பானுமதி)- 45,280
4. நாதக (கார்த்திகா)- 5,268
5. இந்திய கம்யூ., (லட்சுமணன்)-1,157
தாராபுரத்தில் 9471 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றது. நாம் தமிழர், இ.கம்யூ., உட்பட, 19 பேர் டெபாசிட் இழந்தனர்.
தட்டாஞ்சாவடி- என்ஆர்காங்கிரஸ் வெற்றி
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடியில் 80.81 சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைத்து நடந்தது. 4வது சுற்று முடிவில், 8482 ஓட்டுகள் வித்தியாசத்தில் என்ஆர்காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.
1.என்.ஆர்.காங்., (அசோக் ஆனந்த்)-13,358
2. காங்., (விநாயகம்)-4876
3. தி.மு.க., (சேதுசெல்வம்)- 2664
4. இந்திய கம்யூ., (சலீம்)- 310
5. நாம் தமிழர் (கார்த்திக் குமாரி)-172

