சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே டிடிரேடிங் முறையில் 4 முக்கிய வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி, நவம்பர் 6: ஐபிஎல் 2027-ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே 4 முக்கிய வீரர்கள் டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சிஎஸ்கே அணிக்குக் கைமாறியுள்ளனர்.
• லிவிங்ஸ்டனை ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்த சன்ரைசர்ஸ் அணி, தற்போது அவரை ரூ.6 கோடிக்கு சிஎஸ்கேவுக்கு வழங்கியுள்ளது.
• ஜாக் எட்வர்ட்ஸ் தனது ரூ.3 கோடி ஒப்பந்தத் தொகையிலேயே சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.
இவர்களுக்கு மாற்றாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது (ரூ.4.8 கோடி) மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நேதன் எல்லிஸ் (ரூ.2 கோடி) ஆகிய இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினர்கள்.
வீரர்களைத் தக்க வைப்பதற்கான காலக்கெடு வரும் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டிரேடிங் நடவடிக்கை ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

