கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள கடையால் மற்றும் கடையாலுமூடு பகுதிகளில் கடந்த பல மாதங்களாக முதலை ஒன்று நடமாடி வந்தது. இது அப்பகுதி மக்களுக்கும், ஆற்றுப் பகுதிக்குச் செல்பவர்களுக்கும் கடும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில், கடையாலுமூடு நடைகல் பாலம் அருகே ஆற்று நீரில் போடப்பட்டிருந்த மீன்பிடி வலையில் அந்த முதலை எதிர்பாராதவிதமாகச் சிக்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், வலையில் சிக்கிய முதலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பொதுமக்களின் உதவியுடன் முதலையைப் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான முறையில் வனப் பகுதிக்குள் விடுவிப்பதற்காகக் கொண்டு சென்றனர். முதலை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.