தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆத்தூர் காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று (புதன்கிழமை) தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 10-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் அதிக பாரத்துடன் செல்வதைக் கண்ட போலீசார், அவற்றைத் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், 7 கனரக லாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பாரம் ஏற்றி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் விவரங்கள், வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த 7 லாரிகளுக்கும் அபராதம் விதித்ததுடன், இனிவரும் காலங்களில் விதிகளை மீறக்கூடாது என ஓட்டுநர்களுக்குக் எச்சரிக்கை விடுத்தனர்.