திருநெல்வேலியில் தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் நவம்பர் 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியானது தினமும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் பீமா ஜூவல்லரி அருகில் உள்ள தமிழ்நாடு எண்டர்பிரைசஸ் வளாகத்தில் இயங்கி வரும் ரோகிணி கோல்டு அகடாமியில் நடைபெறுகிறது.
பயிற்சியில் தங்கத்தின் தரம் அறிதல், 24 கேரட் முதல் 9 கேரட் வரையிலான ஹால்மார்க் தரம் அறிதல் மற்றும் உரைகல் பயன்படுத்தும் முறைகள். தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, கல் மற்றும் ஆபரண வகைகள் குறித்து அறிதல். போலியான நகைகளைக் கண்டறிதல், பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்புகள். நகை வியாபாரம் மற்றும் அடகுக் கடைகள் தொடங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்.
தகுதிகள் & கட்டண விவரம்:
18 வயது நிறைந்த ஆண், பெண் இரு பாலரும் சேரலாம். கல்வித் தகுதியோ, வயது வரம்போ தேவையில்லை. பயிற்சி கட்டணம் ₹8,200 ஆகும். தாழ்த்தப்பட்ட பிரிவினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்குச் சலுகைக் கட்டணமாக ₹6,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பயிற்சி கட்டணத்துடன் நேரில் சென்று பயிற்சியில் இணையலாம்.
இப்பயிற்சி முடிவில் வழங்கப்படும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும் எனத் தகவலமைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு www.rohinigoldacademy.com என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

