நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே செல்லும் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நிலவரம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, தாமிரபரணி ஆற்றின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் வகையில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவது குறித்தும், ஆற்றின் கரைகளைப் பலப்படுத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசித்து ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது அரசு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.