திருநெல்வேலி சரக காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று (04.11.2026) புதன்கிழமை திருநெல்வேலி சரக அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (DIG) முனைவர் இரா. திருநாவுக்கரசு, கலந்துகொண்டு, வருகை தந்திருந்த பொதுமக்களிடம் இருந்து நேரடியாகக் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களைப் பெற்றார். மேலும், அம்மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 247 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

