தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரவி மோகன், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (நவம்பர் 4) காலை எளிமையான முறையில் சாமி தரிசனம் செய்தார்.

இன்று காலை திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்த நடிகர் ரவி மோகன், முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டார். ஆரஞ்சு நிற சட்டை மற்றும் முகக்கவசம் அணிந்தபடி, பொதுமக்களுடன் இணைந்து எளிமையாக அவர் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த அவருக்குக் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், அர்ச்சகர்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவித்து மாதா கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நடிகர் ரவி மோகன் கோவிலுக்கு வந்திருக்கும் தகவல் பரவியதை அடுத்து, அவரைக் காண்பதற்காகக் கோவில் வளாகத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்தனர். ரசிகர்களின் வேண்டுகோளை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட நடிகர் ரவி மோகன், பொறுமையுடன் அவர்களுடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

கடந்த சில மாதங்களாகப் பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த நடிகர் ரவி மோகன், தற்போது ஆன்மீகப் பயணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்க வந்திருப்பது சினிமா வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.