பொதுமக்களின் கோரிக்கை மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, எழும்பூர் - கன்னியாகுமரி, தாம்பரம் - திருநெல்வேலி உள்ளிட்ட 7 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - போடிநாயக்கனூர் (06059/06060)
தாம்பரத்திலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு இரயில் (06059) செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 24 வரை (சனிக்கிழமைகளில்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரிலிருந்து தாம்பரம் வரும் சிறப்பு இரயில் (06060) செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 25 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) இயங்கும்.
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (06045/06046):
எழும்பூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு இரயில் (06045) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 25 வரை (வெள்ளிக்கிழமைகளில்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து எழும்பூர் வரும் சிறப்பு இரயில் (06046) செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 27 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) இயங்கும்.
மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூர் (06126/06125):
மங்களூரு சென்ட்ரலிலிருந்து எழும்பூர் செல்லும் சிறப்பு இரயில் (06126) செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, எழும்பூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் செல்லும் சிறப்பு இரயில் (06125) செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 27 வரை இயங்கும்.
போத்தனூர் - சென்னை சென்ட்ரல் (06028/06027):
போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு இரயில் (06028) மற்றும் மறுமார்க்கமாகச் சென்னை சென்ட்ரலிலிருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு இரயில் (06027) ஆகியவை செப்டம்பர் 4 முதல் நவம்பர் 29 வரை (வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) நீட்டிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி - தாம்பரம் (06166/06165):
நெல்ையிலிருந்து தாம்பரம் வரும் சிறப்பு இரயில் (06166) செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 27 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) இயங்கும். மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு இரயில் (06165) செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 28 வரை (திங்கள்கிழமைகளில்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தாம்பரம் (06070/06069):
நெல்லையிலிருந்து தாம்பரம் வரும் சிறப்பு இரயில் (06070) செப்டம்பர் 3 முதல் அக்டோபர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு இரயில் (06069) செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 30 வரை இயங்கும்.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06030/06029):
நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு இரயில் (06030) செப்டம்பர் 6 முதல் நவம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு இரயில் (06029) செப்டம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை இயங்கும். பயணிகள் இந்தச் சேவை நீட்டிப்பைப் பயன்படுத்தித் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

