தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை ஹாக்கி போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இப்போட்டியில் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி, எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மற்றும் நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரி ஆகிய 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளின் முடிவில், எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியும், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றன. தொடர்ந்து, இன்று காலை 6:30 மணிக்கு நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை வீழ்த்தி, எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி ஹாக்கி அணி ஒட்டுமொத்தச் சாம்பியன் பட்டத்தைக் தட்டிச் சென்றது.
வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.54,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக விளையாடிய உடற்கல்வித் துறை மாணவர்கள் கிருஷ்ணன், விஷால் மற்றும் ஹாக்கி அணியின் அனைத்து வீரர்களையும் கல்லூரிச் செயலாளர் ரொட்டேரியன் கண்ணன், முதல்வர் செல்வராஜ், உடற்கல்வித் துறைத் தலைவர் செல்லத்துரை, பேராசிரியர்கள் ரமேஷ் பாண்டியன், வெங்கடேஷ், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

