திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, தனது 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தைத் தூத்துக்குடியில் இருந்து தொடங்கியுள்ளார்.

சென்னையில் இத் திரைப்படத்தைப் பார்த்த பிறகு, தூத்துக்குடி கே.எஸ்.பி.எஸ் திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து ஆதி படம் பார்த்தார். திரையரங்கிற்கு வருகை தந்த அவருக்கு, தூத்துக்குடி ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரசிகர்களிடையே உரையாற்றிய ஹிப்ஹாப் ஆதி தெரிவித்ததாவது: "இப்படம் சும்மா பார்த்து இயக்கிய படம் என்பதை விட, எனது வாழ்க்கையில் திரைத்துறையில் நான் சந்தித்த வலிகள், சவால்கள் மற்றும் அனுபவங்களிலிருந்து உருவான கதையாகும். இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் பேராதரவையும் பாராட்டையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் தனது நன்றி தெரிவிக்கும் பயணத்தைத் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதி, அடுத்தடுத்த மாவட்டங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.