கடலோரப் பாதுகாப்புக் குழும தலைமை அலுவலகத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் வாரிசுகளுக்கான 90 நாட்கள் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சித் தொடக்க விழாவிற்கு, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத் தலைமை தாங்கி, பயிற்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவல் துணை கண்காணிப்பாளர் பிஎன் ராஜன், கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளர் பேச்சிமுத்து, தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், மீன்வளத்துறை ஆய்வாளர் பெல்சி சிவானி, டெல்டா ஸ்குவாட் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் பயிற்சியில், மொத்தம் 40 மீனவ வாரிசுகள் (மாணவர்கள்) ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சி முகாம் தொடர்ந்து 90 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.