கடந்த 2014-ஆம் ஆண்டு தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலத் தட்டப்பாறையிலிருந்து கீழத் தட்டப்பாறை செல்லும் வழியில் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த சமுத்திரம் (40) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (36) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பவுல் கணபதியாபுரத்தைச் சேர்ந்த துரைபாண்டி (32) ஆகிய இருவரைதட்டப்பாறை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்குத் தூத்துக்குடி மாவட்ட முதன்மைச் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி மகேஸ்வரி இன்று (செப்டம்பர் 23, 2026) தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகம் மற்றும் துரைப்பாண்டி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ. 10,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.