கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் சங்கர வள்ளிநாயகம் அறக்கட்டளை மற்றும் இலக்கியச் சாரல், கோவில்பட்டி இசை எப்.எம் இணைந்து குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.

திருமலை முத்துச்சாமி தலைமை வகித்தார். இயக்குனர் இந்திராணி முன்னிலை வகித்தார், உதவி தலைமையாசிரியர் முருக சரஸ்வதி வரவேற்புரை வழங்கினார்.

நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாகலாபுரம் புதூர் மாணவர் சர்வேஷ்னின் திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற இராசு, கோவில்பட்டி இசை எப்.எம். கோ.சுரேஷ்குமார், தபால் துறை அலுவலர் தவமணி ஓய்வு மற்றும் சிறைக் காவலர் ராஜாராம் ஓய்வு, சாந்திப்பொருமாள், டாக்டர் சுரேஷ், விரிவுரையாளர் கனகம்

கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர்.

விரிவுரையாளர் ராஜலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இலக்கியச் சாரல் நிறவனர் தினகரன் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். சங்கர வள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துச்சாமி குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பு செய்தனர்