தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூநா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் அறிவர் இரவி தலைமை தாங்கிய இவவிழாவிற்கு, தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியை மாரிசெல்வி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் மணிராஜ், ஆர்.ஈ. பில்டர்ஸ் & லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனர்கள் ஏனோஸ் சுகந்தராஜ், ராபின்சன் ஜெபசிங் மற்றும் முன்னாள் ஆசிரியை பெல்சிபாய் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. மாணவர்களின் திறமைகளைப் பாராட்டிச் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, திருமண்டல பெருமன்ற உறுப்பினர் மணிராஜ் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவின் இறுதியில் தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் நன்றி கூறினார்.