தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் 'லயன்ஸ் கிளப் ஆஃப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி' ஆகியவை இணைந்து நடத்திய பாறை ஓவிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு, கோவில்பட்டி கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பினைத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், பால சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் உதயசங்கர் மற்றும் லயன்ஸ் கிளப் நிகழ்ச்சித் தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கக் கோவில்பட்டி கிளைத் தலைவரும் ஆசிரியையுமான மணிமொழிநங்கை தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் முருகேஷ் முன்னிலை வகிக்க, சங்கத்தின் கிளைச் செயலாளர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.
இப்பயிற்சி வகுப்பில் ஓவிய ஆசிரியர் நெல்லை அப்பாவு லெனின் சிறப்புப் பயிற்றுநராகக் கலந்து கொண்டார். கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த 140-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்குப் பாறை ஓவியங்களின் வரலாறு குறித்து விளக்கமளித்தார்.
மேலும், தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில், மண்பாண்டங்கள் செய்யப் பயன்படும் சிறப்பு மண்ணைக் கொண்டு வெள்ளை அட்டைத் தாளில் பாறை ஓவியங்களை எவ்வாறு வரைவது என்பது குறித்துச் செயல்முறைப் பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் லயன் தங்கமணி கோவில்பட்டி முன்னணி தொழில் அதிபர்களான கார்த்திக் ஸ்வீட்ஸ் லயன் கார்த்தி முத்துவிலாஸ் ஹோட்டல் லயன் ராமச்சந்திரன் ஆனந்தம் ஏஜென்சிஸ் லயன் ஜெயபாஸ் தசிஎகச கிளைப் பொருளாளர் ஆசிரியர் கண்ணகி, எழுத்தாளர்கள் ராஜலட்சுமி நாராயணசாமி, வரகவி நல்லாசிரியர் முருகேசன், பொன்னராசு, இலக்கியச்சாரல் நிறுவனர் ஆசிரியர் தினகரன் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இப்பாறை ஓவிய ஒரு நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் பங்கேற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். முகா கடலை மிட்டாய் உரிமையாளர் லயன் கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

