தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான சுடலை ஆண்டவர் கோவிலை அகற்றுவேன்" என மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக உதவிப் பொறியாளர் மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அகரம் கிராம மக்கள் சார்பில் சந்தன ராஜா என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராமத்திற்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அருள்மிகு சுடலை ஆண்டவர் கோவிலை அகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் கருதி பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோவில் வழிபாட்டுத் தலத்திற்குத் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும், தூத்துக்குடி மாநகராட்சி உதவிப் பொறியாளர் ஏ.இ. லெனின் என்பவர் "நான் நினைத்தால் கோவிலை அகற்றுவேன்" எனக் கூறி பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, உதவிப் பொறியாளர் ஏ.இ. லெனின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய துறைரீதியான விசாரணை நடத்தி, ஆதாரங்களுடன் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சட்டம் மற்றும் பணியாளர் விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

