இது தொடர்பாகக் கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமவள லாரிகள் அனைத்தும் உள்ளூர் தேவைகளுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றன. கேரள மாநிலத்திற்குக் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் எந்த லாரியும் அனுமதிக்கப்படவில்லை.
12 சக்கர டாரஸ் கனரக வாகனங்கள், உள்ளூர் தேவைக்கான கனிமவளங்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே அரசு விதிகளின்படி அனுமதிக்கப்பட்டு வருகின்றன. கனிமவளப் போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கியப் பகுதிகளில் மாவட்டக் காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனிமவளங்கள் போக்குவரத்து தொடர்பாக ஏதேனும் சட்டவிரோதச் செயல்பாடுகள் அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர்-யிடம்நேரடிப் புகார் எண்ணிற்கு (9150884088) உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

