தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ். செண்பககனி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே. மகேஸ்வரன், மாவட்ட இணைச்செயலாளர் காசிராம், மாவட்டப் பொருளாளர் ஸ்ரீ பாலகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் எஸ். கபாலீஸ்வரன், நாகலாபுரம் நகரச் செயலாளர் பாக்யராஜ், புதூர் மேற்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் ஜே. சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், கட்சி நிர்வாகிகள் அக்ரி பாலமுருகன், விஜயகுமார், எஸ். செண்பகராஜ், தங்கமாரியப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை செலுத்தினர்.

