தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் ஜான் சுந்தர்சிங். இவர் இங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 26 ஆண்டுகளாக சபை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த சிலர் அவரை சபை ஊழியர் பணியில் இருந்து நீக்க வேண்டும் கூறி வந்துள்ளனர்.
இதில் இருதரப்பினராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சபை ஊழியராக ஜான்சுந்தர்சிங் அவரது மனைவி ஆகியோர் வெளியூர் சென்றிருந்துள்ளனர். வீட்டில் அவரது மகள் ஜெரின்ஐடா(23) மட்டும் தனியாக இருந்துள்ளார். பிஎஸ்சி அக்ரி முடித்துள்ள இவர் தற்போது அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜான்சுந்தர்சிங் வீட்டிற்கு ஆரோக்கியபுரம் சேகரகுரு ராபின்சன்(57), குருவானவரின் உதவியார் திரித்துவராஜ்(35), ஆரோக்கியுரத்தைச் சேர்ந்த எட்வின் மனைவி கரோலின்(38) இவர் து£த்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர், திருமண்டல பொருளாளர் ஜாண்சன், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் உதயசிங்(57), எட்வின்(40), ஆசிரியர் சாமுவேல் கிறிஸ்டோபர்(58) ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது இளம்பெண்ணை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். அப்போது தான் தனியாக இருப்பதாக கூறியுள்ள நிலையில் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவுகளுக்கு பூட்டு போட்டு இளம்பெண் ஜெரின் ஐடாவை சிறை வைத்தனர். இதனையடுத்து அவர் துரிதமாக அவசர போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்த மெஞ்ஞானபுரம் போலீசார் 1மணி நேர போராட்டத்திற்குப் பின் பூட்டை உடைத்து இளம்பெண்ணை மீட்டனர். இதுகுறித்து ஜெரின்ஐடா அளித்த புகாரின் பேரில் பாதிரியார், ஆசிரியர், திருமண்டல நிர்வாகிகள் உட்பட 8பேர் மீது மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

