கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்த அஜீஸ் (22) என்பவர், இளம்பெண் ஒருவரை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து, அவரது பெயரில் தவறான தகவல்களை பதிவிட்டதாக புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் பல பெண்களை இதேபோன்று சித்தரித்து பதிவிட்டதாகவும், அவரது செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பகிரும் சமூக வலைதளக் குழுவுடன் தொடர்பு உள்ளதா, இதில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.