தூத்துக்குடி புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தனி வருவாய் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில், இளநிலை ஆய்வாளர் அக்கினி பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்குளம் விலக்கு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அச் சோதனையில், உரிய அரசு அனுமதிச் சீட்டு எதுவுமின்றிச் சுமார் 14 டன் எம்.சாண்ட் மணல் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, எம்.சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை மேல் நடவடிக்கைக்காகக் கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சுரங்கத் துறை அதிகாரிகளின் புகாரின் பேரில் கயத்தாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, டிப்பர் லாரியை ஓட்டி வந்த தெற்கு கோனார்கோட்டையைச் சேர்ந்த ரா. மூக்கையா (51) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

