இப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயிலும் நடைபெற்ற நிலையில் தற்போது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது திரைப்படமான ‘சீன்’, வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ஆவேஷம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யா கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' மற்றும் 'ழகரம் ஸ்டூடியோஸ்' இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், சுமார் ரூ.100 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாக்கப்படும் இப்படத்திற்குச் சுஷின் ஷ்யாம் இசையமைக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னதாக 'சீன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 'சீன்' படத்தின் அதிரடியான டிரெய்லரைப் படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக இப்படம் நவம்பர் 6-ல் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

