» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு - வி.கே.சசிகலா நம்பிக்கை
திங்கள் 11, செப்டம்பர் 2023 10:41:55 AM (IST)
வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும் என்று வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பள்ள மொளச்சூரில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் வி.கே.சசிகலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானமும் வழங்கினார். முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ மொளச்சூர் பெருமாள் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியது: வரும் மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தான் திமுகவினர் தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். அரசு அதிகாரிகளுக்கு மாதம் சம்பளம் வழங்கவே அரசிடம் போதுமான நிதி இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் மகளிருக்கு மாதா மாதம் உரிமை தொகை வழங்குவது எந்த விதத்தில் சாத்தியமாகும். மேலும் தேர்தலில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் சமமாக நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெ . ரசிகர்கள்Sep 12, 2023 - 03:52:08 PM | Posted IP 172.7*****