» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வியாழன் 17, ஆகஸ்ட் 2023 5:49:00 PM (IST)

தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆளவேண்டும் என்ற கலைஞரின்  கனவை நிறைவேற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெற்றது. . தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது. திமுக அரசின் திட்டங்களால் பின்தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறியுள்ளது, ராமநாதபுரத்தில் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது. தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம்.

ராமநாதசாமி கோவிலில் தங்கத் தேரை ஓட வைத்ததும் திமுக ஆட்சிதான். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசு. 5,000 சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது திமுக அரசு. தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

நல்லAug 29, 2023 - 11:33:50 PM | Posted IP 162.1*****

முடிவு

ALLELUYAAug 27, 2023 - 03:39:04 PM | Posted IP 172.7*****

THE LAST EMPIRE./ இறுதி சுற்று / வாழ்வே மாயம் / அழியாத கோலங்கள் / பகல் கனவு / காக்கா முட்டை /

இவன்Aug 26, 2023 - 10:19:40 AM | Posted IP 162.1*****

திருட்டு ரயில் ஏறி வந்த கட்டுமரம் திருட்டு குடும்பங்களுக்கு பெரிய மன்னர் பரம்பரை நினைப்பு

இரட்டை இலைAug 19, 2023 - 11:35:07 AM | Posted IP 172.7*****

இது கூட நல்லா இருக்கே .... நீட் விலக்கு / மகளிற்கு Rs 1000 கொடுப்பது...டாஸ்மாக் மூடுவது...மின் கட்டண குறைப்பு / புகார் பேட்டி etc etc போலத்தான்.....

nishaAug 18, 2023 - 12:25:51 PM | Posted IP 172.7*****

Cheating arasangam

MakkalAug 18, 2023 - 10:05:53 AM | Posted IP 172.7*****

Poda kkoooo

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory