» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு ஓடிவிட முடியாது: ராகுல் காந்தி

திங்கள் 5, ஜூன் 2023 12:13:24 PM (IST)

ஒடிசா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியதாவது: பாஜகவாக இருக்கட்டும் ஆர்எஸ்எஸ்ஸாக இருக்கட்டும் அவர்களுக்கு வரலாற்றின் மீது பழி சொல்வதே வழக்கம். காங்கிரஸ் ஆட்சியின்போதும் ஒரு விபத்து நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மீது பழி போடவில்லை. எங்கள் ரயில்வே அமைச்சர், விபத்துக்கு நான் பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று கூறி ராஜினாமா செய்தார். 

ஆனால் இப்போது அங்குள்ள அரசிடம் என்ன பிரச்சினையென்றால் உண்மையை எதிர்கொள்ளவும் ஒப்புக்கொள்ளவும் மாட்டாது சாக்குபோக்கு கூறுகின்றனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி யாராக இருந்தாலும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசமாட்டார்கள். கடந்த காலங்களையே குறை சொல்வது வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னொருவர் மீது பழிபோட்டுவிட்டு தப்பிப்பதையே வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.

நவீன இந்தியாவை உருவாக்கியதில் என்.ஆர்.ஐ.-க்கள் பங்கு முக்கியமானது. மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் அனைவரும் என்.ஆர்.ஐ.கள் தான். பல்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருந்தபோதும் அவர்கள் தேசத்திற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இதனைத்தான் இந்திய சமூகத்திடமும் நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ட்விட்டரில் விமர்சனம்: முன்னதாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இதுவரை இதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது. உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

அய்யாJun 8, 2023 - 11:31:22 PM | Posted IP 162.1*****

அவர் உங்களை விட 20 வயது மூத்தவர்... அதற்காவது மரியாதை கொடுங்கள்..

அந்த கலப்பட அரசியல்வாதி ராகுல்Jun 8, 2023 - 05:49:57 PM | Posted IP 172.7*****

வெளிநாட்டில் இருந்து பேச்சை பாரு

TAMILARKALJun 5, 2023 - 04:08:07 PM | Posted IP 172.7*****

தன் தாய்நாட்டை பற்றி வேறு நாட்டில் தரக்குறைவாக பேசும் உன்னைக் போல மட்டமான மனிதன் இந்த உலகத்தில் யாரும் இல்லை......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory