» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
ராமர் கோயில் பெயரில் மிகப் பெரிய நில ஊழல்: ஆர்எஸ்எஸ், பாஜகவினர் ஆதாயம்: பிரியங்கா
வியாழன் 23, டிசம்பர் 2021 4:15:19 PM (IST)
அயோத்தியில் கடவுள் ராமர் பெயரில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. அதன்மூலம் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் ஆதாயம் அடைந்துள்ளனர்" என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தலித் மக்கள் தங்கள் நிலங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாமல், அதை சில உயர் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வாங்கியுள்ளனர். இந்த மிகப் பெரிய நில அபகரிப்பு ஊழலை உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் ஆகியோர் நிலத்தை வாங்கியதிலும், அதை கோடிக்கணக்கில் விற்பனை செய்ததிலும் தொடர்பு இருக்கிறது. ராமர் கோயிலுக்கு அருகே இருக்கும் நிலத்தில் கூட கொள்ளை டந்துள்ளது. பாஜக தலைவர்கள் மட்டுமின்றி, யோகி அரசின் ஊழியர்களும் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கடவுள் பெயரைக் கூறி பாஜக அரசு ஊழல் செய்கிறது. இந்த தேசத்தின் மக்களின் நம்பிக்கை மீதான தாக்குதல். ராமர் கோயில் அறக்கட்டளையின் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அதிகாரிகள், பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ஆதாயம் பெற செலவிடப்பட்டுள்ளது. ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு கிடைத்தவுடன் அடுத்த 5 நிமிடங்களில் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி முதல் ரூ.18.5 கோடி வரை நிலம் விற்கப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடத்தில் பாஜக நிர்வாகிகள் ரூ.16.5 கோடி லாபமடைந்துள்ளனர்.
ராமர் கோயிலுக்கு அருகே இருக்கும் நிலம் ரூ.2 கோடிக்கு இருமுறை விற்கப்பட்டுள்ளது, முதல்முறை ரூ.8 கோடிக்கும், 2-வது முறைரூ.18.5 கோடிக்கும் அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு இந்த துண்டு நிலம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு விற்கப்பட்டது. அந்த நபர் அந்த நிலத்தை இரு பிரிவுகளாக விற்பனை செய்தார். முதல் பிரிவை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.8 கோடிக்கும், 2-வது பகுதியை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ரூ.2 கோடிக்கு ரவி மோகன் திவாரி என்பவர் வாங்கினார். ஆனால், அடுத்த 5 நிமிடங்களில் ரவி தான் வாங்கிய ரூ.2 கோடி நிலத்தை ரூ.18.5 கோடிக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்பனை செய்துள்ளார்.
ஒரு தனிநபருக்கு ரூ.8 கோடிக்கு விற்கப்பட்ட நிலம், அடுத்த 5 நிமிடங்களில் ரூ.18.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது ஊழல் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது. இந்த நில விற்பனைக்கு சாட்சியங்கள் யார், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகியும், அறக்கட்டளை உறுப்பினரும், மற்றொருவர் அயோத்தி மேயர். சில நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு, அது அதிகமான விலைக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நன்கொடை மூலம் மக்களிடம் பெறப்பட்ட பணம், நிலம் வாங்கியதன் மூலம் செலவு செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க மாவட்ட அளவிலான அதிகாரியை உ.பி. அரசு நியமித்துள்ளதாக அறிந்தேன். ராமர் கோயில் அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின் மத்திய அரசு உருவாக்கியது. ஆதலால் விசாரணை என்பது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில்தான் நடக்க வேண்டும்" என பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
உண்மDec 24, 2021 - 07:51:35 AM | Posted IP 162.1*****
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் ப சொதம்பரம் என்ற திருட்டு சிதம்பரம் போன்ற நிறைய ஊழல்வாதிகள் காங்கிரஸில் உள்ளனர்..
மேலும் தொடரும் செய்திகள்

ஓராண்டு காலத்தில் 10 ஆண்டு சாதனைகளை நிறைவேற்றி உள்ளோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வெள்ளி 13, மே 2022 11:53:05 AM (IST)

மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி: ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!
சனி 7, மே 2022 5:33:59 PM (IST)

கிழக்கு கடற்கரை சாலை பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் கூட விரும்ப மாட்டார்கள்: ஜெயக்குமார்
திங்கள் 2, மே 2022 4:16:36 PM (IST)

துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா: தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்!
திங்கள் 25, ஏப்ரல் 2022 5:41:27 PM (IST)

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.10,000-ஆக உயர்த்தி வழங்குக: மநீம வலியுறுத்தல்
சனி 16, ஏப்ரல் 2022 3:39:33 PM (IST)

அரசியலில் இருந்து விரட்ட முடியாது, மக்கள் நம்பிக்கை நிச்சயம் வெற்றி பெறும் : சசிகலா
செவ்வாய் 12, ஏப்ரல் 2022 5:17:00 PM (IST)

tamilanDec 29, 2021 - 04:56:12 PM | Posted IP 173.2*****