» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் : ஆட்சியர் தகவல்!

புதன் 17, ஏப்ரல் 2024 11:35:48 AM (IST)

வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. மேற்படி தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்காணும் ஆவணங்களை அடையாள சான்றாக பயன்படுத்தி வாக்களிக்கலாம். 

1. வாக்காளர் அடையாள அட்டை

2. ஆதார் அட்டை

3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை

4. கணக்கு புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

5. மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

6. ஓட்டுநர் உரிமம்

7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தல் வழங்கப்பட்டது)

8. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை

9. ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

10. இந்திய கடவுச்சீட்டு

11. ஓய்வூதிய ஆவணம் (புகைபடத்துடன் கூடியது)

12. அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலார்களுக்கு வழங்கப்பட்டது)

13. அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory