» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

இந்த வாரம் எப்படி? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள்!!

வெள்ளி 21, மே 2021 12:47:27 PM (IST)

வெள்ளி முதல் வியாழன் வரை (21.5.2021 - 27.5.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்:

சுக்கிரன், செவ்வாய், குரு சாதக நிலையில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.

அசுவினி: செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீர்கள். தொலைத்தொடர்பு அனுகூலம் தரும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை சற்றுத் தள்ளி வைப்பது நல்லது. நண்பர்கள் உதவி செய்வர்.

பரணி: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு வழிகளில் உதவி செய்வார்கள். பெற்றோரின் உடல்நலன் சீராக இருக்கும். பேச்சில் அதீத கவனம் தேவை.

கார்த்திகை 1: கொண்டாட்டங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு ஓரளவு அதிகரித்தாலும் தேவையற்ற செலவுகள் உண்டாகும். வழக்குகளில் வாய்தா ஏற்படும். நட்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

சந்திராஷ்டமம்: 25.5.2021 இரவு 10:37 மணி - 27.5.2021 நாள் முழுவதும்

ரிஷபம் :

புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.

கார்த்திகை 2,3,4: கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். இளைஞர்கள் தங்கள் செயல்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும்.

ரோகிணி: மனக்குழப்பத்தால் முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாறுவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் சற்று தாமதப்படும். தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிரிகள் மனம் மாறுவார்கள்.

மிருகசீரிடம் 1,2: விருந்து, விசேஷங்களுக்கு செல்வீர்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான முயற்சியில் சிறிய தடைகள் ஏற்பட்டு விலகும். தொழிலில் இதுவரை இருந்து வந்த இழுபறி நிலைகள் மாறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

மிதுனம்:

புதன், கேது, ராகு தாராள நன்மைகளை வழங்குவர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.மிருகசீரிடம் 3,4: வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருந்தால் சிரமம் வராது. புதிய சாதனைகள் செய்து பிறரின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கவலைகள் குறையும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

திருவாதிரை: பெண்களுடனான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிலருக்கு மனச் சஞ்சலங்களும், அலைச்சல்களும் ஏற்படலாம். வீண்செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அனைத்திலிருந்தும் விரைவில் மீண்டு வருவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: புதிய வாகனம் வாங்கும் முயற்சி பல காலத்துக்குப் பிறகு நிறைவேறும். பயணத்தின் போது பொருட்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு நல்லகாலம் பிறக்கும். தாயின் ஆசியை பெறுவீர்கள்.

கடகம் :

சூரியன், சுக்கிரன், புதன் அனுகூல பலனை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.புனர்பூசம் 4: சிறிய அளவிலான புதிய முதலீடுகள் செய்யலாம். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரப் போட்டிகளால் ஏற்பட்டிருந்த வீண் மனஸ்தாபம் தீரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

பூசம்: எதிர்பார்பார்ப்புக்கு மேல் பணவரவு இருக்கும். சகபணியாளரால் அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் தேவைகள் நிறைவேறும்.

ஆயில்யம்: கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். நீண்ட காலமாக தாயாருக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். அலுவலகத்திலும், வீட்டிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்மம் :

செவ்வாய், சந்திரன், சூரியன் அதிர்ஷ்டகர பலன்களை தருவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

மகம்: வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் இருக்காது. ஆனாலும் செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீர்கள். பல்வேறு நன்மைகள் தரக்கூடிய வாரம் இது. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

பூரம்: நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த நன்மை ஒன்று கிடைக்கும். பிள்ளைகள் பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைவர். வாழ்க்கைத்துணைக்கு அலுவலகத்தில் இருந்து நற்செய்தி வரும். உடன்பிறந்தோர் உதவி செய்வர்.

உத்திரம் 1: குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் நற்செய்தியை பெறுவர். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

கன்னி :

கேது, சந்திரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

உத்திரம் 2,3,4: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தாயாரால் செலவுகள் ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவு இருக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.

அஸ்தம்: வெளியூர், வெளிநாட்டில் இருந்து ஆறுதல் தரும் செய்திகள் வரும். கடந்த வாரங்களில் இருந்து வந்த கடினமான சூழ்நிலையில் இருந்து விடுபடுவீர்கள். எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள்.

சித்திரை 1,2: சிலர் வீட்டை விற்று பணம் பெறுவர். உங்களை பாவச்செயல்களைச் செய்யும்படி யார் துாண்டினாலும் மறுப்பது நல்லது. புதிய நட்பு நன்மை தரும். எதிர்பாலினத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை.

துலாம் :

புதன், குரு கூடுதல் நற்பலன்களை தருவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

சித்திரை 3,4: நல்ல செயல்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையால் உங்களின் மதிப்பு உயரும். திட்டமிட்ட விஷயம் வெற்றிகரமாக முடிய மெனக்கெடுவீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.

சுவாதி: பிள்ளைகளுக்கு பெருமையும், புகழும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

விசாகம் 1,2,3: சொத்துக்களால் இருந்த வீண்செலவுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த மனஅழுத்தம் நீங்கும். பெண்களுக்கு பாராட்டுக் கிடைக்கும். ஆடம்பரச் செலவு செய்யும் எண்ணம் வராமல் கவனமாக இருங்கள்.

விருச்சிகம் :

குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனைத் தருவர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.

விசாகம் 4: சுபநிகழ்ச்சிகள் சிறிய தடைக்கு பிறகு நல்ல முறையில் நடக்கும். பொதுநலப் பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். ஏமாற்றத்தை தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

அனுஷம்: மனைவியுடன் சமாதானமாகப் போவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சேமிப்புகள் பத்திரமாக இருக்கும். மாணவர்களுடைய முயற்சிகள் சற்றுத் தள்ளிப்போகும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை மிதமான காலம்.

கேட்டை: பிறரை அனுசரித்துச் சென்று நற்பெயர் வாங்குவீர்கள். தொழில் முன்னேற்றத்தில் சற்றே வேகக்குறைவு இருக்கக்கூடும். பெண்களால் லாபமும், நன்மையும் ஏற்படும். தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.

தனுசு :

கேது, ராகு, புதன் தாராள நற்பலன்களை வழங்குவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

மூலம்: சொத்துக்கள் வாங்கும், விற்கும் விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவு சீராக இருக்கும். பணியாளர்கள் உயர்வு காண்பார்கள்.

பூராடம்: சகோதர, சகோதரிகளிடையே ஒற்றுமை நிலவும். பணியில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். வீண் பழி ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டாம். உங்களின் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

உத்திராடம் 1: வெளிநாட்டில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். எதிலும் நிதானப்போக்கு இருப்பதைத் தவிர்க்க இயலாது. அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். மன தைரியம் அதிகரிக்கும்.

மகரம் :

குரு, சுக்கிரன், செவ்வாயால் நன்மை உண்டு. அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

உத்திராடம் 2,3,4: செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அதிர்ஷ்டத்தின் மீது அதீத நம்பிக்கை வைக்காமல் உழைப்பை நம்புங்கள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர்களுக்குப் பிரச்னை வராது.

திருவோணம்: யாருடைய தவறையும் சுட்டிக்காட்ட வேண்டாம். வாக்குவாதம் நடக்கும் இடத்திலிருந்து விலகுங்கள். போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். தம்பதி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

அவிட்டம் 1,2: உங்கள் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. யார் வம்புக்கும் போக வேண்டாம். சிலர் வேண்டுமென்றே உங்களைச் சீண்டுவார்கள். அவர்ளைக் கண்டுகொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 21.5.2021 காலை 6:00 - மாலை 4:44 மணி

கும்பம் :

சுக்கிரன், புதன், சந்திரனால் நன்மை கிடைக்கும். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அவிட்டம் 3,4: சற்றே பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படும். நிதி நிலையில் ஏற்ற, இறக்கம் நிலவும். பணியை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் சிலர் குறைகாண்பர்.

சதயம்: சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பிற்காலத்தில் அவை நல்ல முறையில் நிகழும். எதிலும் பொறுமையுடன் இருப்பது அவசியம். மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும்.

பூரட்டாதி 1,2,3: சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பரிமாற வேண்டாம். ஆலோசனை இல்லாமல் புதிய முதலீடு செய்வதை தவிர்க்கவும். உடல் நலம் முன்பைவிடச் சீரடையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 21.5.2021 மாலை 4:45 - 23.5.2021 மாலை 6:09 மணி

மீனம் :

சனி, ராகு, சந்திரன் அதிர்ஷ்டகர பலன்களை வழங்குவர். பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.

பூரட்டாதி 4: பெண் மேலதிகாரிகளிடம் கனிவாக நடந்து கொண்டு நற்பெயர் எடுப்பீர்கள். சக பணியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

உத்திரட்டாதி: சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகள் மூலம் நன்மை நடக்கும். புதிய முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் கவனம் செல்ல வாய்ப்புள்ளது.

ரேவதி: பிறரை நம்பி பண விஷயத்தில் வாக்குறுதி கொடுக்காதீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையில் முன்னேற்றம் காண கடின உழைப்பு தேவை.

சந்திராஷ்டமம்: 23.5.2021 மாலை 6:10 - 25.5.2021 இரவு 10:36 மணி


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory