» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

திங்கள் 22, செப்டம்பர் 2025 5:23:09 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி‌.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இயங்கி வருகிற நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி‌. எஸ். ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். சிவில் துறைத் தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். முகாமிற்கு கல்லூரி துறைத்தலைவர்கள் சோபியா பிரபாகர், பெனிட்டா ராஜு, சிவமுருகன், ஜான் வெஸ்லி, பிரபாகர் வேத சிரோமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த முகாமில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேஸ் தலைமையில், தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், உடையார் குளம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் தூத்துக்குடி ரத்த வங்கி ஊழியர்கள சிறப்பாக நடத்தினர். இதில் 55 மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். நிறைவாக கல்லூரி பர்சார் தனபால் நன்றியுரை நிகழ்த்தினார். 

இம் முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாக செயலாளருமா ன நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory