» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மரியன்னை கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி

திங்கள் 22, செப்டம்பர் 2025 10:37:54 AM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் இனிகோ நகர் பகுதியில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. 

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பேரணி நடைபெற்றது. மாணவிகள் உற்சாகமாகக் கலந்து கொண்டு, பலகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

இந்த நிகழ்வு செயலாளர் எஸ். குலந்தை தெரசா, முதல்வர் ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் எழிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இப்பேரணியை சமூக மேம்பாட்டு திட்டத்தினைச் சேர்ந்த ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory