» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:36:39 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார். 

இந்த விருதை ஆசிரியர் தினத்தன்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். ஆசியை வனிதாவுக்கு கருங்குளம் புனித வளன் துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து பாராட்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜாக்சன் தலைமை வகித்தார் வாழ்த்தினார். 

ஆசிரியை ஜெயமேரி வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியை வனிதா தனக்கு அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை பள்ளி வளர்ச்சிக்காக தாளார் ஜாக்சன் அவர்களிடம் ஒப்படைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியை பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory