» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா
வியாழன் 10, ஜூலை 2025 12:14:19 PM (IST)

தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயசண்முகம் தனது உரையில் குருபூர்ணிமா என்பது ஆடிமாத பௌர்ணமி நாளில் மகரிஷி வேத வியாசர் அவதரித்த நாள் என்றும், இவரே நான்கு வேதங்களையும் எழுதியவர் என்றும் கூறினார். தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும் உலகில் மிகமிக உயர்வானது.
எனவே மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை கூர்மையாக கவனித்து, அதைப் பதிவாக்கினால் உயர்ந்த நிலையை அடையலாம். எனவே ஆசிரியைகளுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்களோடு வாழ்க்கையில் நம் இலட்சியத்தை அடைய உறுதி கொள்வோம் என்று வாழ்த்தி பேசினார்.
அதன்பின் மாணவ, மாணவியர்கள் பூக்களை சமர்ப்பித்து ஆசிரியைகளை வணங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் பூத்தூவி மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


