» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சக்தி வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:18:39 AM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் நடைப்பெற்ற யோகா தினத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த யோகா பயிற்சியாளர்கள் சரத்குமரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் சிறப்பு பலன்களையும், நம்முடைய உணவுமுறை பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
அதன்பின் மாணவ, மாணவியர்களுக்கு சூரியநமஸ்காரம் தொடங்கி பத்மாசனம், யோகமுத்ரா, பஸ்திமோத்தாசனம், திருகோணசனம், வச்சிராசனம் போன்ற பலவகை ஆசனங்களை செயல் விளக்கம் செய்து காட்டி மாணவ, மாணவியர்களை செய்ய வைத்து ஆர்வமூட்டினார்கள்.
பள்ளியின் முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிறைவாக ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் துணைமுதல்வர் ரா.ச.பிரியங்கா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


