» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனியில் அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி ஊராட்சியில், அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து 5வது ஆண்டாக இலவச நோட்டு வழங்கும் விழா மாதா நகரில் நற்பணி மன்ற பொறுப்பாளர் தொம்மை அந்தோணி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட வழக்கறிஞர் மோகன் தாஸ், அரசு மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கி சிறப்புரை ஆற்றினர். முன்னதாக மன்ற நிர்வாகி விமல் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மன்ற நிர்வாகி வினோ நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் அழகர், முத்து, மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழா
வெள்ளி 11, ஜூலை 2025 5:51:28 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா
வியாழன் 10, ஜூலை 2025 12:14:19 PM (IST)

ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பொன் விழா தொடக்க விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 10:41:21 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:28:16 AM (IST)
