» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி இளைஞர் நல்வாழ்வு மற்றும் கவின் கலைக் கழகத்தின் சார்பாக கவின் கலை 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பி.எட் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் படைப்பாக்கத்திறன், நுண்திறன் மற்றும் ஒருங்கிணைந்த இயக்கத் திறனை வளர்ப்பதற்காக நடத்தப்பட்டது. விழாவின் ஆரம்ப நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரான அ.சங்கீதா அம்ரோஸ், பி.எம்.சி மழலையர் பள்ளி ஒருங்கிணைப்பாளர், தூத்துக்குடி நுண் கலையின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
போட்டியின் முதல் நாளான 15.05.2025 அன்று நிகழ்வின் முத்தாய்ப்பாக பரதநாட்டியம், மனிதநேயம் என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவு காணொளி காட்சி, மேற்கத்திய தனி நடனம், விண்ணுக்கும், மண்ணுக்கும் என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் திறன் மற்றும் தொழில்நுட்பம் சார் முக ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
இரண்டாம் நாளான 16.05.2025 அன்று இவர்கள் சந்தித்தால், தனிநபர் பாட்டு, இணைவு நடனம், குறும்படம் எடுத்தல், கருப்பு வெள்ளை பாடலுக்கான நடனம் மற்றும் நாட்டுப்புற குழு நடனம், போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. திறன் மிக்க நடுவர்கள் மாணவர்களை செயல்பாட்டை ஆய்வு செய்து தீர்ப்பளித்தனர். மாணவர்கள் வைகை, காவேரி, பவானி, தாமிரபரணி மற்றும் தென்பென்னை குழுக்களாக போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான வெற்றியை தென்பென்னை குழு பெற்றனர்.
இவ்விழாவின் நிறைவு நிகழ்ச்சிக்கு சொ.சுப்புலெட்சுமி, செயலர், ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழையும், பரிசுகளையும் வழங்கினார். முனைவர்.கு.ராஜதுரை, மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள்; இணைந்து முதல்வர் த.கனகராஜ் வழிகாட்டுதலின் படி விழா ஏற்பாடுகளை செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)
