» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!
சனி 17, மே 2025 3:15:10 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் மைய நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
4-ம் நாள் நடந்த நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் அனைவரையும் வரவேற்றார். த.சி.எ. க.ச தூத்துக்குடி கிளைத் தலைவர் திருக்குடும்ப மேரி, செயலாளர் வாலண்டினா, மற்றும் திருச்செந்தூர் கிளைச் செயலாளர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
த.சி.எ.க.ச. கோவில்பட்டி கிளை தலைவர் மணிமொழி நங்கை ஆசிரியர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்குப் பாடல், விளையாட்டு, கதை என பல நிகழ்ச்சி நடத்தி குழந்தைகளைக் குதூகலப்படுத்தினார்கள். குழந்தைகளும் பாடல்கள் பாடியும், கதைகள் சொல்லியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து குழந்தைகளின் நினைவுத் திறனை மேம்படுத்தும் பல்வேறு போட்டிகள் நடந்தன.
மாவட்ட மைய நூலகம் சார்பில் சிறப்பு அழைப்பாளருக்கு புத்தகப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆத்தூர் அறிவுச் சுடர் படிப்பகத்தில் 225 புத்தகங்களுக்கு மேல் வாசித்த அரசுப் பள்ளி மாணவர் முத்து சரண் தன்னுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. நூலக அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


