» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!
வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையின் மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஆரம்பமாக கணினி அறிவியல் துறை பாடகர் குழுவினர் இறைவணக்கப் பாடல் பாடினர்.நான்காம் ஆண்டு மாணவர் டெரிக் ஜோஸ் வேத பாடம் வாசித்தார். இறுதி ஆண்டு மாணவி இசபெல் ஆரம்ப ஜெபம் செய்தார்.
கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜெமில்டா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ஜெயக்குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து செய்தி மலரை வெளியிட்டுப் பேசினார். மாணவர் பேரவை செயலாளர் சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். மூன்றாம் ஆண்டு மாணவர் ஆறுமுகநயினார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி டவர் ஹவுஸ் எண்டர்பிரைஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஷாரோன் D ரோஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. நான்காம் ஆண்டு மாணவி திவ்யா நன்றியுரை ஆற்றினார். நிறைவாக பாடகர் குழுவினர் தேசிய கீதம் பாடினர்.
இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், கணினி துறைத் தலைவர் முனைவர் ஜெமில்டா, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எமிலி எஸ்தர் ராணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
