» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!
வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST)
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளின் விவரம்:
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அலெக்ஸ்ராணி 581 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா 577 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம், பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமதி 572 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளனர்.
கோவில்பட்டி கவுணியன் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜஸ்ரீ, ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேவதி ஆகிய இருவரும் 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகிலன், ராவாள்ளா, கே ஆர் ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷர்மிளா ஆகியோர் 591 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம், கவுணியன் மெட்ரிக் பள்ளி மாணவி ஹர்ஷிதா 589 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளனர்.
6 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: இக்கல்வி மாவட்டத்தில் 3219 மாணவர்கள், 3733 மாணவிகள் என 6952 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 3045 மாணவர்கள், 3624 மாணவிகள் என மொத்தம் 6669 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96 சதவீத தேர்ச்சியாகும்.
இளையரசனேந்தல், பிள்ளையார்நத்தம், சிவஞானபுரம், செங்கோட்டை, வெம்பூர், வேப்பலோடை ஆகிய 6 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள்: கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி, கம்மவார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை கம்மவார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பேரிலோவன்பட்டி டிவிஏஎன் மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூர் ஜான் தி பாப்திஸ்து மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை செயின்ட் லூசியா மகளிர் மேல்நிலைப்பள்ளிகள்.
100 சதவீத தேர்ச்சி பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்: கீழஈரால் ஆக்ஸிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கயத்தார் பாபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமாரகிரி சிகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி கவுனியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லட்சுமி சீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
ராவிள்ளா கே ஆர் ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை விமல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மடோனாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விளாத்திகுளம் சாரோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் சார்லஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எட்டையபுரம் வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிந்தலக்கரை எஸ் ஆர் எம் எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
