» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா
வெள்ளி 2, மே 2025 8:29:57 PM (IST)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் 51- ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் 51- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தொழிற் பள்ளி வளாகத்தில் உள்ள கிறிஸ்து சிற்றாலயத்தில் சிறப்பு திருவிருந்து ஆராதனையை குருவானவர் செல்வராஜ் நடத்தினார். சபை ஊழியர் ஸ்டான்லி வேதபாடம் வாசித்தார். கைத்தொழில் பாடசாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஆரோன் ஜெயசிங் தேவ செய்தி அளித்தார்.
பின்னர் நடைபெற்ற ஆண்டு விழா பொதுக்குழு கூட்டத்திற்கு ஆரம்பமாக ஓய்வு பெற்ற ஆசிரியர் தங்கராஜ் ஜெபம் செய்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி அனைவரையும் வரவேற்றார். செயலாளர் ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர்கள் தங்களது கற்றல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளியின் முன்னாள் கண்காணிப்பாளர் ஆரோன் ஜெயசிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் முதல் முறையாக பங்கேற்ற மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பெற்றனர். நிறைவாக முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஜோசப் நன்றி கூறினார்.
விழாவில் நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி முதல்வர்(பொறுப்பு) ஜாண்சன், தொழிற்பயிற்சி மைய மேலாளர் ஜோயல் ஜெயக்குமார் உட்பட முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தாளாளர் வக்கீல் பிரபாகர் ஆலோசனையின் பேரில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
