» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:43:32 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை - ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு இணைப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பள்ளிக்கல்வித்துறை ஆதார் இணைப்பு அலுவலர் சாந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆதார் இணைப்பு பணிகளை செய்தார். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, மாவடி பண்ணை, தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் மற்றும் தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி, மூக்குபீறி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை மற்றும் ஆதார் எண் இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் செல்வின் பொன்தாஸ் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் முகமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் முகமிற்கான ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
