» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி விகாசா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வரலாற்று கண்காட்சி
ஞாயிறு 5, ஜனவரி 2025 1:37:23 PM (IST)
தூத்துக்குடி விகாசா சர்வதேச மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி விகாசா சர்வதேச மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. தூத்துக்குடி பட்டினமருதூர் கிராமத்தில் மேற்பரப்பு களப்பணியில் கண்டெடுக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று தொன்மங்கள் மற்றும் வரலாற்று தரவுகளை வரலாற்றுத் தலைவர் மருத்துவர். வேல்முருகன் கோரிக்கையின்படி வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி பதிவு செய்தார்.
இந்த கண்காட்சியில், நமது மூதாதையரின் மறைந்த மற்றும் மறைக்கப்பட்ட நகரமான கயல் @ கீழ்பட்டினம் மற்றும் அதன் மிகப்பெரிய பொக்கிஷங்களைப் பற்றி மேலும் பல விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்த மேற்பரப்பில் கிடைத்த விதவிதமான மற்பாண்ட தொன்ம குறியீடுகள், பவளப்பாறையில் செய்யப்பட்ட சில விளையாட்டு மற்றும் கவன் குண்டு போன்றவைகள், படிக சிதைவுகள், இரு புறமும் மெருகூட்டபட்ட ஓடு சிதைவுகள், ஐம்பொன் கிரேக்கம் மற்றும் சீன நாணயங்கள், சோழர் கால மற்றும் பாண்டியர்கள் தங்கம் கலந்த நாணயங்கள், பீங்கான் மற்றும் கண்ணாடி சிதைவுகள், விளையாட்டு சில்லுகள் மற்றும் பொம்மைகள், 8ம் நூற்றாண்டின் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் அரேபிய கல்வெட்டுக்கள் இடம்பெற்றன.
கண்காட்சியில் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி பேசுகையில், சுமார் 6 அடிக்கு கீழே 35-40அடி அகலத்தில் 2 அடி கணத்தில் பூமியில் சுமார் 10 கி.மீ தூரம் (பட்டினம் மருதூர் -கல்லாறு முகத்துவாரம் முதல் தருவைக்குளம்-சர்வே எண் 365 முகத்துவாரம்) வரை காணப்படும் மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் அமைக்கப்பட்ட சாலை (அ)கோட்டை பேன்ற சிதைவுகள், வட்ட வடிவ உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செவ்வக வடிவத்தில் (26மீ நீளம், 25மீ அகலம்) நான்கு புறமும் படிக்கட்டுகளோடு கூடிய மிக தொன்மையான கிணறு போன்றவை அடிப்படையில் நாம் வரலாற்றினை சற்று மாற்றி யோசிக்க மறைந்த மதுரை- மூதூர் (கபாடபுரம்) குறித்த மிகவும் முக்கியமான வரலாற்று விடையங்கள் நிச்சயமாக இந்த சிப்பிக்குளம் (கீழ் வைப்பார்) முதல் வெள்ளப் பட்டி (கீழ் அரசடி) பகுதிகளில் நாம் கண்டறிந்து நம் வைப்பார் நாகரீகத்தின் உண்மை உலகுணர செய்யலாம் என்றார்.
மக்கள் கருத்து
P.RAJESH SELVARATHI -ARCHAEOLOGICAL ENTHUSIASTJan 5, 2025 - 02:53:53 PM | Posted IP 172.7*****
THANKS FOR ENCOURAGING US AND STUDENTS REGARDING HISTORY & ARCHAEOLOGY. SUCH A NICE AND VALUABLE MOMENT IN OUR JOURNY OF ENTHUSIAST ACTIVITIES REGARDING UNDERWENT CITY OF CAIL @ KILPATINAM IN OUR THARUVAIKULAM - PATINAMARUDUR VILLAGE.
sivaJan 5, 2025 - 07:44:43 PM | Posted IP 172.7*****