» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா
புதன் 25, டிசம்பர் 2024 12:36:35 PM (IST)
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜெசிபொ்ணான்டோ தலைமை வகித்தார். கல்லூரி செயலா் சிபானா முன்னிலை வகித்தார். அடைக்கலாபுரம் செயிண்ட் ஜோசப் ஆதரவு அற்றோா் இல்ல இயக்குனா் அருட்தந்தை பிரமில்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குழந்தைகளுக்கும் தாய்மாா்களுக்கும் நலத்திட்டம் வழங்கி கிறிஸ்து பிறப்பு செய்தி வழங்கினார்.
விழாவில் மாணவிகளின் கிறிஸ்துபிறப்பு பாடல்கள் நடனம் நடைபெற்றது. முக்கியமாக கிறிஸ்துபிறப்பு நிகழ்வை நிலைக்காட்சியாக தத்ருபமாக செய்து காட்டினாா்கள். நிகழ்வில் துனை முதல்வா் எழிலரசி, அருட்சகோதரி ஜோஸ்பின் ஜெயரானி, மற்றும் அனைத்துதுறை பேராசியா்கள் கலந்து கொண்டனர்.