» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சிலம்பம் போட்டியில் பதக்கம்: எஸ்.கே.கே.பள்ளி மாணவருக்கு பாராட்டு!

வியாழன் 19, டிசம்பர் 2024 3:10:36 PM (IST)



தூத்துக்குடி  மாவட்ட அளவில் சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற நாகலாபுரம் பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். 

தூத்துக்குடி மாவட்ட அளவில் 17வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டிகள் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் நாகலாபுரம் எஸ்.கே.கே. இந்து உயர் நிலைப் பள்ளி மாணவர் சிவா கலந்து கொண்டு வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். 

வெற்றி பெற்ற மாணவன் சிவாவை   மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் கண்ணதாசன், பள்ளி செயலர் ஜெயராஜ், தலைமை ஆசிரியை சுசீலா, உடற்கல்வி ஆசிரியர் பார்த்திபன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory