» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கீழ ஈரால் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் : வட்டாட்சியர் வழங்கினார்!
வியாழன் 19, டிசம்பர் 2024 10:41:17 AM (IST)
கீழ ஈரால் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டாட்சியர் சங்கர நாராயணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையினர் சார்பில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் பதிவுகளில் உள்ள திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது தேர்தல் வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகள் திருத்தம் செய்தல், புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை பெற்ற வருகின்றனர். அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணிகள் மற்றும் பழைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு எட்டயபுரம் வட்டம் கீழஈராலில் அமைந்துள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு போட்டி (wall magazine) நடத்தப்பட்டது. இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணத்தை எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் சங்கர நாராயணன் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார், உடன் கல்லூரியில் முதல்வர், பேராசிரியர்கள் இருந்தனர்.