» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்: மாணவிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளர் அறிவுரை!

புதன் 11, டிசம்பர் 2024 11:44:14 AM (IST)



நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு "யாதுமானவள்" –தன்முனைப்பாற்றல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஆயிஷா ரோட்டரி இறைவணக்கமும், பைசர் ரோட்டரி நான்குவழி சோதனையும் வாசித்தார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். 

பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் முஹம்மது இப்ராஹிம் தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பாலமுருகன் பேசினார். உதவி ஆளுநர் கண்ணன் மற்றும் திட்ட இயக்குனர் விஜயகுமாரி வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி செயலர் சுப்புலட்சுமி கௌரவ விருந்தினர் உரையாற்றினார். மாவட்ட ஆளுநர் நியமனம் காந்தி சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். சங்கர சுப்பிரமணியன் சிறப்பு பேச்சாளரை அறிமுகம் செய்தார்.

பின்னர் பேசிய தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், போலியோ நோய் ஒழிப்பில் ரோட்டரியின் பங்கு குறித்து விளக்கமளித்தார் . தொடர்ந்து பேசிய அவர், மாணவிகள் இந்த சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பேசினார். இந்த உலகில் நாம் தனித்து முன்னேறி விட முடியாது. நம்முடைய முன்னேற்றத்தில் உறவினர்கள், நண்பர்கள் என பலர் பங்குகொள்வார்கள். நல்ல நண்பர்கள் கிடைத்தால் மட்டுமே நமக்கு நல்ல வழிகள், வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, மாணவிகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் மாணவிகளை கேட்டுக்கொண்டார்.

மாணவிகளின் கேள்விகளுக்கும் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பதில் அளித்தார். கேள்விகள் கேட்ட மாணவிகளுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் விக்டர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள், தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க தலைவர் விக்னேஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த யாதுமானவள் நிகழ்ச்சி சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளின் மூலம் 1 லட்சத்தி 27 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தன்முனைப்பாற்றல் பேச்சு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory